அழகின் மோட்டார் பைக் பயணமும்... (சிறு கதை )
குமாரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இறைஅடிமை என்ற அழகுக்கும் அதே ஊரை சார்ந்த இனியவளுக்கும் திருமணம் முடிந்தது. அழகுகிற்கு தன் நெடுங்கால ஆசை தன் மனைவியை வைத்து நாகர்கோவில் நகரில் மோட்டார் பைக்கில் உலாவரவேண்டும் என்று அந்த நாளும் வந்தது . திருமணம் முடிந்து இரண்டுமாதம் கழித்து .
ஆசை ஆசையாய் மேற்கு மாவட்டதின் அவன் கிராமத்தில் இருந்து இருவரும் கிளம்பினார் மோட்டார் பைக்கில்
(குமரிமாவட்டத்தில் அழகு கொள்ளைகொள்ளும் அனைவரையும் ) அதை ரசித்த வண்ணம் கிளம்பினார் இருவரும்.
(குமரிமாவட்டத்தில் அழகு கொள்ளைகொள்ளும் அனைவரையும் ) அதை ரசித்த வண்ணம் கிளம்பினார் இருவரும்.
ரோட்டின் இருபுறம் உள்ள வயல்வழிகளையும் ரோட்டில் உள்ள குண்டும் குழியும் முதல் முதலாய் ரசிப்பதுபோல் ரசித்தான் அழகு ...ஏன் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் ....
பைக்கோ வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அதிவேகத்தில்....
நகரின் பல பகுதிகளுக்கும் சென்றனர் புதிதாய் கட்டப்படட வணிகவளாகத்திற்கும் சென்றனர் ... எல்லாம் சுற்றிமுடித்துவிட்டு கன்னியாகுமரிக்கும் சென்றனர் கடலை ரசித்தனர் கடல் மணலில் கைகோர்த்து நடந்தனர்... அழகோ படு சந்தேசத்தின் உஸ்சத்தில் இருந்தான் ...
அந்த சந்தோசமான நேரத்தில் எதிர்பாராத ஒன்று நடந்தது.
அவனின் இனியவள் மயங்கி கீழே விழுந்தால் அழகு பதறிவிடடான்....
அதற்குள் அங்கு பக்கத்தில் இருந்தவர்கள் கூட ஒருவர் நீரை முகத்தில் அடித்து இனிவளை எழுப்பினார் ....
அழகிற்கு அப்போது தான் உயிரே திரும்பவந்தது ....
இனியவளே அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றனர் அனைவரும் ..
மருத்துவர் எல்லா விவரமாக கேட்டுவிட்டு பரிசோதித்து விட்டு அழகை பார்த்து சிரித்துக்கொண்டே சென்னார் நீங்கள் அப்பா ஆகப்போகிறீங்கன்னு ....
மகிழ்ச்சியில் உசத்திற்க்கே அழகு சென்றுவிடடான் .....
வீட்டை நோக்கி பைக் பயணம் தொடங்கியது மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் ...
இப்போது திட்டி தீர்த்தான் அழகு ஆட்சியாளரை "ரோடபோட்டுருக்கணுவே ரோடு ஒரே குண்டும் குழியுமா என்று"...
(வரும்போது இனித்த ரோடு இப்போ ....என்னவாம்)
Comments
Post a Comment