கபர்ஸ்த்தானும் (பள்ளிவிளை) கரீமும் ,
கரீம் துரு துரு என இருக்கும் சிறுவன் அவனுடன் பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் கரீம் தான் கடைக்குட்டி .
வாப்பா வெளிநாட்டு சபறளி உம்மா வீடடை கவனிக்கும் பொறுப்பாளர் அவர்களின் குடும்பம் நடுத்ததர குடும்பம் தான்
கரீம் கூட பிறந்தவர்கள் அனைவரும் இவனைவிட பத்து வயது மூத்தவர்கள் .கரீமின் சிறுவயதிலே கூடப்பிறந்தவர்கள் அவர்களின் வேலை படிப்பு கல்யாணம் என்று கரீமை பிரிந்து விடடனர் விசேஷ நாட்களில் மட்டும் அனைவரும் வருவார்கள் ...
கரீமின் தனிமையில் கூட துணை உம்மாவும் உம்மாவின் இஸ்லாமிய கதைகளும் அதில் முக்கியமாக மறுமையின் சிந்தனை அதிகம் இருக்கும் கதைகளே அதன் கூட கப்பரில் மனிதன் சந்திக்கும் வேதனையும் தண்டனையும் கதையாகவே செல்லப்பட்டது ...
கரீமின் பொழுது போக்கு புத்தகம் படிப்பது அதுவும் பள்ளி தின்னையில் அமர்ந்து படிப்பது மற்றும் நண்பர்களுடன் ஊர்சுற்றுவது ...
இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தான் ஒருநாள் பள்ளி திண்ணையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த கரீம் ஒருகாட்ச்சியை காண்கின்றான் கபர்ஸ்தானில் இருந்து புல்மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் விரண்டோடி வருவதை அவனுக்கு அப்போது நியாபகம் வந்தது உம்மா சொன்ன கதையில் கப்பரில் வேதனை செய்யவதை மிருகங்கள் உணரும் என்று ...
கபர்ஸ்த்தான் பக்கத்தில் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளுக்குள்ளே பயம் ஒரு புறம் . ஒரு அசட்டு மனதைரியத்துடன் கபர்ஸ்த்தான் பக்கத்தில் சென்று பார்த்தான் சே என்று காற்று யாரும் இல்லாத அமைதி, காற்றை தவிர எந்த சப்தமுமில்லை .
கபர்ஸ்த்தானின் (பள்ளிவிளை) தென்னம் தோப்பின் அழகையும் புளியமர காற்றும் அவனுக்குள் இனம்புரியாத அமைதியையும் தந்தது அன்றுமுதல் அவன் படிக்கும் படிப்பறையும் தனிமை போக்கும் இடமானது பள்ளிவிளை ...
இப்படி நகர்ந்த அவனது பல நாட்களில் பல அதிசயங்களை பார்த்தான் அங்கு பல மனிதர்களின் கபர்களின் நிலமை அவனுக்கு வாழ்க்கையின் முழு தத்துவத்தை சொல்லிகொடுத்தாது ...
பலர் பார்த்து பயப்படும் இடம் கரீமுக்கு பல படிப்பினைகளை அந்த உலகின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது அன்றிலிருந்து பள்ளிவிளைக்கு செல்லுவது கரீமுக்கு மறுமை சிந்தனை அதிகரிக்கும் இடமாக காட்சி அளித்தது ....
" நாம்முடைய மறுமை சிந்தனை அதிகரிக்க அதிகம் ஸியாரத் செய்வோம் கபர்ஸ்தானை "
Comments
Post a Comment