Posts

சுமை ....

# சுமை  .... கதிஜா இரவு 10 மணி ஆகிவிட்டதால் வீட்டின் வாசல் கதவை அடைத்து கொண்டிருந்தார் , ஆயிசாவும் அஸ்மாவும் சமையலறை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.... எல்லா வேலைமுடித்துவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானார்கள் . ஆயிசா வீட்டின் மூத்த மருமகள் இரண்டாவது அஸ்மாவும் , அடுத்தது கதிஜாவும் வீட்டிற்கு வந்த மருமகள்கள் எல்லோரின் கணவன்மார்களும் வெளிநாட்டில் தான் இருக்கின்றனர்...மூத்தவர் மாலிக் இப்பொழுது தான் 15 வருட வெளிநாட்டு வாழ்க்கை (10 வருட திருமண வாழ்க்கையும்) முடித்து வந்திருக்கிறார் இரண்டு மாதத்திற்குமுன்பு ... ஆயிசா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தான் போய் படுக்க வேண்டும் எனென்னறால் கணவர் வருவதற்கு முன் மாமியாரின் அறையில் தான் படுத்திருந்தார் அவளுக்கு தான் குழந்தைகள் இல்லையே மற்றவர்கள் தனித்தனி அறையில் குழந்தைகளுடன் படுபதால் . ஆயிசா மாடிக்கு போன பின் அஸ்மாவும் கதிஜாவும் வீட்டின் ஹாலில் இருந்து பேச ஆரம்பித்தனர். கதிஜா: சும்மாவே மாமி தலைல தூக்கி வச்சுதான் ஆடுவாங்க மூத்த மருமகன்னு இப்ப கேக்கவா வேணும் அஸ்மா : இந்த வீட்டிற்க்காக நம்மளும் மாடா உழைக்கிறோம் அவள விட எதில குறைஞ்சசுடோம் சொல்ல ...

கபர்ஸ்த்தானும் (பள்ளிவிளை) கரீமும் ,

கரீம் துரு துரு என இருக்கும் சிறுவன் அவனுடன் பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் கரீம் தான் கடைக்குட்டி . வாப்பா வெளிநாட்டு சபறளி உம்மா வீடடை கவனிக்கும் பொறுப்பாளர் அவர்களின் குடும்பம் நடுத்ததர குடும்பம் தான் கரீம் கூட பிறந்தவர்கள் அனைவரும் இவனைவிட பத்து வயது மூத்தவர்கள் .கரீமின் சிறுவயதிலே கூடப்பிறந்தவர்கள் அவர்களின் வேலை படிப்பு கல்யாணம் என்று கரீமை பிரிந்து விடடனர் விசேஷ நாட்களில் மட்டும் அனைவரும் வருவார்கள் ... கரீமின் தனிமையில் கூட துணை உம்மாவும் உம்மாவின் இஸ்லாமிய கதைகளும் அதில் முக்கியமாக மறுமையின் சிந்தனை அதிகம் இருக்கும் கதைகளே அதன் கூட கப்பரில் மனிதன் சந்திக்கும் வேதனையும் தண்டனையும் கதையாகவே செல்லப்பட்டது ... கரீமின் பொழுது போக்கு புத்தகம் படிப்பது அதுவும் பள்ளி தின்னையில் அமர்ந்து படிப்பது மற்றும் நண்பர்களுடன் ஊர்சுற்றுவது ... இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தான் ஒருநாள் பள்ளி திண்ணையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த கரீம் ஒருகாட்ச்சியை காண்கின்றான் கபர்ஸ்தானில் இருந்து புல்மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் விரண்டோடி வருவதை அவனுக்கு அப்போது நியாபகம் வந்தது உம்மா ...

அழகின் மோட்டார் பைக் பயணமும்... (சிறு கதை )

குமாரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த இறைஅடிமை என்ற அழகுக்கும் அதே ஊரை சார்ந்த இனியவளுக்கும் திருமணம் முடிந்தது. அழகுகிற்கு தன் நெடுங்கால ஆசை தன் மனைவியை வைத்து நாகர்கோவில் நகரில் மோட்டார் பைக்கில் உலாவரவேண்டும் என்று அந்த நாளும் வந்தது . திருமணம் முடிந்து இரண்டுமாதம் கழித்து . ஆசை ஆசையாய் மேற்கு மாவட்டதின் அவன் கிராமத்தில் இருந்து இருவரும் கிளம்பினார் மோட்டார் பைக்கில்  (குமரிமாவட்டத்தில் அழகு கொள்ளைகொள்ளும் அனைவரையும் ) அதை ரசித்த வண்ணம் கிளம்பினார் இருவரும். ரோட்டின் இருபுறம் உள்ள வயல்வழிகளையும் ரோட்டில் உள்ள குண்டும் குழியும் முதல் முதலாய் ரசிப்பதுபோல் ரசித்தான் அழகு ...ஏன் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் .... பைக்கோ வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அதிவேகத்தில்.... நகரின் பல பகுதிகளுக்கும் சென்றனர் புதிதாய் கட்டப்படட வணிகவளாகத்திற்கும் சென்றனர் ... எல்லாம் சுற்றிமுடித்துவிட்டு கன்னியாகுமரிக்கும் சென்றனர் கடலை ரசித்தனர் கடல் மணலில் கைகோர்த்து நடந்தனர்... அழகோ படு சந்தேசத்தின் உஸ்சத்தில் இருந்தான் ... அந்த சந்தோசமான நேரத்தில் எதிர்பாராத ஒன்று நடந்தது. அவனின் இ...