சுமை ....
# சுமை .... கதிஜா இரவு 10 மணி ஆகிவிட்டதால் வீட்டின் வாசல் கதவை அடைத்து கொண்டிருந்தார் , ஆயிசாவும் அஸ்மாவும் சமையலறை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.... எல்லா வேலைமுடித்துவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானார்கள் . ஆயிசா வீட்டின் மூத்த மருமகள் இரண்டாவது அஸ்மாவும் , அடுத்தது கதிஜாவும் வீட்டிற்கு வந்த மருமகள்கள் எல்லோரின் கணவன்மார்களும் வெளிநாட்டில் தான் இருக்கின்றனர்...மூத்தவர் மாலிக் இப்பொழுது தான் 15 வருட வெளிநாட்டு வாழ்க்கை (10 வருட திருமண வாழ்க்கையும்) முடித்து வந்திருக்கிறார் இரண்டு மாதத்திற்குமுன்பு ... ஆயிசா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தான் போய் படுக்க வேண்டும் எனென்னறால் கணவர் வருவதற்கு முன் மாமியாரின் அறையில் தான் படுத்திருந்தார் அவளுக்கு தான் குழந்தைகள் இல்லையே மற்றவர்கள் தனித்தனி அறையில் குழந்தைகளுடன் படுபதால் . ஆயிசா மாடிக்கு போன பின் அஸ்மாவும் கதிஜாவும் வீட்டின் ஹாலில் இருந்து பேச ஆரம்பித்தனர். கதிஜா: சும்மாவே மாமி தலைல தூக்கி வச்சுதான் ஆடுவாங்க மூத்த மருமகன்னு இப்ப கேக்கவா வேணும் அஸ்மா : இந்த வீட்டிற்க்காக நம்மளும் மாடா உழைக்கிறோம் அவள விட எதில குறைஞ்சசுடோம் சொல்ல ...